துபாயில் வசித்து வந்த 33 வயது இந்தியர் ஒருவரிடம் 3 பெண்கள் நைசாக பேசி போலி மசாஜ் பார்லருக்கு அழைத்துச் சென்று 55 லட்சம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்தியர் மசாஜ் செய்யப்படும் என்று அழகிய பெண்களின் படங்களை வைத்து விளம்பரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண்கள் அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை சொல்லியிருக்கின்றனர். குடியிருப்பு அந்த நபர் சென்றபோது அங்கே இருந்த ஆப்பிரிக்க பெண்களுக்கு பணத்தை வழங்கி இருக்கிறார். மேலும் செல்போனில் இருக்கும் பேங்க் செயலியை பயன்படுத்தி பணத்தை அனுப்புமாறு தெரிவித்திருக்கின்றனர்.
இதையடுத்து அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவருடைய கிரெடிட் கார்டை எடுத்து 55 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். பிறகு அவரை அந்த குடியிருப்பிலேயே அடைத்து வைத்து வங்கி கணக்கில் இருந்து பணத்தை அனுப்ப வைத்திருக்கின்றனர். கடைசியாக அவரிடம் இருந்த ஐபோனை பிடுங்கி வெளியே அனுப்பி உள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் அந்த இந்திய நபர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆப்ரிக்காவை