Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அரசியல் பேரணியில் தாக்குதல்… 27 பேர் மரணம்… அதிஷ்டவசமாக தப்பிய CEO…!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நடந்த அரசியல் பேரணியில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Image result for 27 killed in attack on Kabul political rally; Afghan CEO Abdullah

ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி, 1995 ல் நடந்த கடுமையான உள்நாட்டுப் போரில் மசாரி உள்ளிட்ட முஜாஹிதீன் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையின் போது கொல்லப்பட்டார். அவர் இறந்த 25 வது ஆண்டு நினைவாக ஷியா பிரிவு மக்கள் காபூலுக்கு அருகிலுள்ள டாஷ்-இ-பார்ச்சி பகுதியில் ஒரு நினைவுச்சின்னத்தை அமைத்துள்ளனர்.

Image result for The attack took place just as Shia political leader Abdul Ali Mazari memorial rally was held today.

இந்நிலையில் ஷியா பிரிவு அரசியல் தலைவர் அப்துல் அலி மசாரியின் நினைவு பேரணி நேற்று  நடைபெற்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த பேரணியில் நாட்டின் தலைமை நிர்வாகி (CEO) மற்றும் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளரான அப்துல்லா ஆப்துல்லா கலந்துகொண்டார். பேரணியில் கலந்துகொண்ட அப்துல்லா உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் நல்ல வேலையாக பயங்கரவாதத் தாக்குதலில் காயமின்றித் தப்பினர்.

Image result for 27 killed in attack on Kabul political rally; Afghan CEO Abdullah

உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி, தாக்குதல் நடத்தியவர்கள் அரைகுறை கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாகவும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளை வெளியேற்ற முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

 

Categories

Tech |