Categories
கிரிக்கெட் விளையாட்டு

5-ஆவது ஒருநாள் போட்டி : மீண்டும் சதம் விளாசிய க்வாஜா!! ஆஸி 45 ஓவர் முடிவில்228/6….!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி   45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்துள்ளது.  

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான   5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் 1 : 30 மணிக்கு  தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் க்வாஜாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.  பின்னர்  ஜடேஜா பந்து வீச்சில் ஆரோன் பின்ச் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஹேண்ட்ஸ் கோம்ப்பும், உஸ்மான் க்வாஜாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பின்னர்  க்வாஜா 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து மேக்ஸ்வெல் 1 ரன்னில் ஆட்டமிழக்க இதனையடுத்து ஹேண்ட்ஸ் கோம்ப் 52, அஸ்டென் டர்னர் 20 ,மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்,  ரன்களில் ஆட்டமிழந்தனர். தற்போது  அலெக்ஸ் கேரி,  ஜய் இருவரும் விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |