இந்நிலையில், சபாக் இந்தி திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் பிசியாக இருக்கும் தீபிகா படுகோனே, தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவரிடத்தில் கர்ப்பம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த தீபிகா படுகோனே கூறியதாவது:- நான் இப்போது கர்ப்பம் தரிக்கும் நிலையில் இல்லை. சினிமாவில் என்னுடைய முழு கவனமும் இருக்கிறது.
நானும், ரன்வீரும் சினிமாவில் நடிப்பதைதான் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறோம். குழந்தைகள் மீது எங்களுக்கு ஆர்வமும், பாசமும் உண்டு. எங்களுக்கும் குழந்தைகள் வேண்டும் தான். அதற்காக, நினைத்த நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. எப்போது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமோ, அப்போது, முடிவெடுத்து செயல்படுவோம். அதை உங்களிடமும் தெரிவிக்கிறேன். அடுத்த ஒன்பதாவது மாதத்தில், நான் சொல்லவில்லை என்றாலும், அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.