சவுதியில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது.
சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது அங்கிருந்த டாக்டர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனைசெய்தனர்.
கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது சளி மாதிரிகளை எடுக்க மூக்கின் உள்ளே விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது எதிர்பாராத விதமாக குச்சி உடைந்து மாட்டிக்கொண்டது.. இந்தக் குச்சியை உடனடியாக வெளியில் எடுப்பதற்கு குழந்தைக்கு மயக்க மருந்தை டாக்டர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தை தன்னுடைய சுயநினைவையும் இழந்துள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தசம்பவம் குறித்து குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறுகையில், குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுப்பதற்கு தான் அனுமதி மறுத்ததாகவும், ஆனால், டாக்டர்கள் இதை வலியுறுத்தியதாக கூறினார். அறுவைசிகிச்சை முடிந்த பின், குழந்தை நல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் தற்போது விடுப்பில் சென்றிருப்பதாகவும், சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாகக் குழந்தை தனது சுயநினைவை இழந்ததாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அவர் தெரிவித்தார்.
குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகி கொண்டிருந்ததை உணர்ந்த தந்தை குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கேட்டுக்கொண்டார். இதற்கு அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு இகவும் தாமதமாகியுள்ளது.
இதற்கிடையே தான் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.. குழந்தையின் இறப்பு மற்றும் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணை நடத்த குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது.