தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது .
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையை எதிர்த்தும் , சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக வழங்க வேண்டுமென்றும் தமாகா கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .
அப்போது நீதிமன்றம் தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது . மேலும் சைக்கிள் சின்னம் வழங்கும் போது தமாகா குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனையை சுட்டிக்காட்டி தமாகா தஞ்சாவூரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அக்கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.