தேவையானவை:
வாழைத்தண்டு ஒரு துண்டு,
பாசிப்பருப்பு கால் கப்,
சின்ன வெங்காயம் 5,
பச்சைமிளகாய் 2,
சீரகம் அரை ஸ்பூன்,
வேர்க்கடலை 100 கிராம்,
நெய் , பால் சிறிதளவு,
கருவேப்பிலை தேவைக்கு,
உப்பு தேவையான அளவு.
செய்யும் முறை :
வாழைத்தண்டை நார் எடுத்து மிகவும் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி அதனோடு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மண் சட்டியில் அல்லது அடி கனமான கடாயில் வேக வைத்த பாசிப்பருப்பு ,உப்பு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டை வேக வைத்த பச்சை வேர்க்கடலை நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம் கருவேப்பிலை, சேர்த்து பால் கலந்து பரிமாறவும்.சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு ரெடி.