பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது
ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கினர்.
தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் நல்ல துவக்கம் கொடுத்தார். விராட் கோலி 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டிவில்லியர்ஸ் களமிறங்கினார். பவர் பிளே வரை அதிரடியாக விளையாடிய பார்த்திவ் பட்டேல் 43 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மொயின் அலி 4, அக்ஷ்தீப் நாத் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸும், டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் தொடக்கத்தில் பொறுமையாக ஆடி வந்தனர். கடைசியில் டிவில்லியர்ஸ் அதிரடியை காட்ட ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிஸும் அவர் பங்குக்கு அதிரடி காட்ட அந்த ஓவரில் மொத்தம் 27 ரன்கள் விளாசினர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து பெங்களூரு அணி 202 ரன்கள் குவித்தது. ஏபி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்களுடனும் (7 சிக்ஸர், 3 பவுண்டரி), மார்கஸ் ஸ்டாய்னிஸ் 34 பந்துகள் 46* ரன்களுடனும் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணியில் மொஹம்மது சமி, முருகன் அஷ்வின், ஆர். அஷ்வின், வில்ஜோன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 203 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.