Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கியில் பூரி ஜெகநாதர் கோவிலுக்குச் சொந்தமான ரூ. 545 கோடி நிதி சிக்கியது!

நிதி நெருக்கடியின் காரணமாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட யெஸ் வங்கியில் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாய் நிதி சிக்கிக்கொண்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, மூலதன நிதியை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை.

இந்த நிலையில் வாராக்கடன் பிரச்சனையால் முடங்கும் சூழலுக்கு சென்றுவிட்ட யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணும் வரை வாடிக்கையாளர்கள் ரூ,50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வங்கியில்தான் நாட்டின் புகழ்பெற்ற ஒடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோவில் பணம் ரூ.545 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பூரி ஜெகநாதர் கோவிலில் காணிக்கை மூலமாக வந்த நிதியை இக்கோவில் நிர்வாகம் 2 வைப்பு நிதியாக பிரித்து மொத்தம் 545 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது.

இந்த வைப்பு நிதிகளிள் ஒன்று மார்ச் 16ம் தேதியும், மற்றொன்று மார்ச் 29ம் தேதி முதிர்வு அடைகிறது. தற்போது யெஸ் வங்கி நிதி நெருக்கடியின் காரணமாக முழுமையாக இயங்கி முடியாமல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் இந்தி 545 கோடி ரூபாய் எப்படி வித்டிரா செய்ய முடியும் என பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய கோவிலின் மூத்த தைத்யபதி விநாயக்தாஸ் மோஹோபத்ரா, ஒரு தனியார் வங்கியில் ஏதோ கொஞ்சம் கூடுதல் வட்டி தருகிறார்கள் என்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் செய்ய காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |