Categories
சினிமா தமிழ் சினிமா

அமிதாப் இடத்தை வாடகைக்கு எடுத்த வங்கி…. ஒரு மாதத்திற்கு இத்தனை லட்சமா….?

நடிகர் அமிதாப் பச்சன் தனது சொந்த கட்டிடத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமிதாப் பச்சன் பிரபல பாலிவுட் நடிகர் ஆவார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வர்த்தக விரிவாக்கத்திற்காக வாடகைக்கு எடுத்துள்ளனர். மும்பையில் ஜூஹூ பகுதி ரியல் எஸ்டேட் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் வீடு வாங்குவதை விட வாடகைக்கு இடம் கிடைப்பது மிகவும் அரிது.ஏனெனில், அந்த பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை.

இதனையடுத்து, அமிதாப்பச்சன் தனது சொந்த கட்டிடத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3150 சதுர அடி அளவிலான கட்டிடத்தின் தரைத்தளத்தை வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த கட்டிடத்திற்கு 15 வருட வாடகையாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மாதம் 18.9 லட்சம் ரூபாயை மாதம் மாதம் வாடகையாக அளிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 25 சதவீத உயர்வு அளிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு 2.70 கோடி ரூபாய் டெபாசிட் தொகையாக கொடுப்பதாகவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |