Categories
மாநில செய்திகள்

இனி வங்கிகளும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்: வங்கிகள் கூட்டமைப்பு

இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இன்று முதல் வரும் 3ம் தேதி வரை அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. அதேபோல, தமிழகத்தில் இதுவரை 1,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும் இன்னும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தான் உள்ளது. மேலும் 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில், அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய கடைகள் மற்றும் வங்கிகள் செயல்பட்டு வந்தன. கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், வங்கிகள் முழுநேர சேவையில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில், 2ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து வங்கிகள் இன்றிலிருந்து மே 3ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செய்லபடும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Categories

Tech |