Categories
உலக செய்திகள்

கூடைப்பந்து விளையாட்டில் 4 அடி உயரம் கொண்டவர் அசத்தி வருகிறார்!!!

அமெரிக்காவை சேர்ந்த உயரம் குறைந்த  மனிதர் ஒருவர் கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.   

உலகில் குள்ளமாக இருக்கும் பலரும்  தங்களால் எதுவும் முடியாது என்ற மன நிலைக்கு தள்ள ப்படுகின்றனர். அப்படி இருக்கும் சூழலில்  கூடைப்பந்து போட்டியில் உடல் வளர்ச்சி குறைந்த ஒருவர் பங்கேற்று அசத்தி வருவது அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Image result for 4-foot Reese Turner has become an internet sensation while playing for Cushing High School in Texas

அமெரிக்காவின் உள்ள  டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீஸ் டர்னர் (Reese Turner). இவர் குள்ளமாக இருந்தாலும் கூடைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரின் உயரம் 4 அடிகளே ஆகும் . இவருடன் சேர்ந்து விளையாடும் மற்றவர்களின் உயரம் 6 அடிக்கும் அதிகமாக உள்ள நிலையில், ரீஸ் டர்னர் மனம் தளராமல் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்ற்று அசத்தினார். ரீஸ் டர்னருடன் இணைந்து  விளையாடுபவர்கள் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்தியதால் குறிப்பிட்ட போட்டியில் சிறப்பாக விளையாடி டர்னர் மட்டும் 3 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

Categories

Tech |