Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அறுவைசிகிச்சையின் போது” அழகான குழந்தை பிறந்தது…. சில நிமிடங்களில் தாயின் உயிர் பிரிந்தது – சோக சம்பவம்…!!

பிரசவத்திற்கான அறுவைசிகிச்சையின் போது பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்துள்ள நாகலாபுரம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராமநாதன் – முத்துலட்சுமி. இதில் முத்துலட்சுமி விளாத்திகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது.  இந்நிலையில் முத்துலட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே  தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயற்கையாகவே அவருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து முத்துலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |