அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த பெண்ணை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள Shakopee என்ற பகுதியில் சாலையோரத்தில் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 2.30 மணிக்கு பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட அந்த பெண் America mafalda Thayer ( 55 ) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் கியூபாவிலிருந்து புலம் பெயர்ந்த நிலையில் உள்ளூர் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், Alexis Saborit ( 42 ) என்பவருடன் அவருக்கு நட்பு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து Alexis Saborit-ஐ காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.