தமிழ் சினிமா படங்களுக்கு தற்போது உலகம் முழுதும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதோடு தற்போது ரிலீஸ் ஆகும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது முதல் நாளிலேயே தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நடிகர்களுக்கு விருதுகள் என்பது அவர்களுடைய திரையுலக பயணத்தில் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. அதன் பிறகு தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் விருதுகளை வாங்கும் போது அதை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடவும் செய்கின்றனர். இதுவரை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வாங்கிய நடிகர்கள் குறித்த பட்டியலை தற்போது ரசிகர்கள் இணையதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அதன்படி எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவக்குமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன், பாக்யராஜ், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், மாதவன், விஜய் சேதுபதி மற்றும் அதர்வா ஆகியோர் வாங்கியுள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவின் வசூல் மன்னராக கருதப்படும் தளபதி விஜய் ஒரு ஃபிலிம் ஃபேர் விருதை கூட வாங்கவில்லை என்பதுதான் தற்போது பெரும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் தளபதி விஜய் ஒரு பிலிம் ஃபேர் விருதை கூட வாங்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.