குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை மற்றும் சென்னை சூட்டில் இருந்து தப்பிக்க இந்த மாதம் சுற்றுலா செல்ல பல காரணம். இந்த கோடைக்காலத்தில் நீங்கள் குடும்பத்துடன் செலவளிக்க கூடிய சிறந்த ஆறு சுற்றுலா நாடுகள்
குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு சிறந்த காலம் கோடைக்காலம் தான். குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை மற்றும் சென்னை சூட்டில் இருந்து தப்பிக்க இந்த மாதம் சுற்றுலா செல்ல பல காரணம். இந்த கோடைக்காலத்தில் நீங்கள் குடும்பத்துடன் செலவளிக்க கூடிய சிறந்த ஆறு சுற்றுலா நாடுகள்.
1.ஹவாய்:
பல தீவுகள் இணைந்த ஒரு நாடு தான் ஹவாய். நூற்றுக்கணக்கான தீவுகள் உள்ளதால் மிதமான வெப்பமண்டல காலநிலை, ரம்மியமான இயற்கைக்காட்சிகள் மற்றும் எரிமலைகள் என சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்கிறது இந்த தீவு. ஹவாயில் பார்க்க வேண்டிய முக்கியமான கடற்கரை வைகிக்கி, கவோனா பே, தி நார்த் ஷோர் மற்றும் லைனிகை. இவை அனைத்து நாம் படத்தில் கண்டு வியந்தது போல அழகிய பனை மரம், நீல நிற தண்ணீர், வெள்ளை மண் என அழகாய் மின்னும்.
2. தாய்லாந்து:
தென்கிழக்கு ஆசிய நாடு கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாக வளர்ந்துள்ளது, இதற்கு முக்கிய காரணம் தாய் உணவு வகைகள் மட்டும் தான். நாம் வியக்கும் வகையில் மிக அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளது தாய்லாந்து. கோ கிராடன், சாவெங், லாங் பீச், ஃபி ஃபி டான் முக்கிய கடற்கரைகளில் ஒன்று.
3. மெக்ஸிகோ:
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாம் மெக்ஸிகோவை பார்த்திருப்போம், ஆனால் அங்கு அழகான கடற்கரை பகுதிகள் அமைந்திருப்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அதில் பயணிகள் இடத்தில் மிகவும் பிரபலமானது தூளும் கடற்கரை.
4. ஃபிஜி:
ஃபிஜி நாட்டின் புகைப்படங்களை பார்த்தாலே நிச்சயம் அந்த நாட்டை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நமக்குள் எழும். அதிக சுற்றுலா பயணிகள் செலாதைந்த ஊரில் மிக சிறந்த கடற்கரைகள் உள்ளது. லிக்கு கடற்கரை பழமையான பாறைகளால் சூழ்ந்துள்ளது. அதிலும் நட்ட டோலா கடற்கரை தண்ணீர் மிக சுத்தமாக இருப்பதால் நீருக்கு அடியில் இருக்கும் மண் துல்லியமாக தெரியும்.
5. அந்தமான் நிக்கோபார் தீவு:
நாட்டை விட்டு தூரம் செல்ல விரும்பவில்லை என்றால் நிச்சயம் அந்தமான் நிக்கோபார் தீவை பார்க்க வேண்டும். இதில் முக்கிய அம்சம் அழகிய நீல நீற கடல் நீர் தான், இந்தியாவில் உள்ள எந்த கடற்கரையிலும் இப்படி பார்க்க முடியாது. கிட்டார் தீவு கடற்கரை, போர்ட் பிலேர்ஸ் வாண்டூர் கடற்கரை பார்க்க வேண்டிய முக்கிய கட்ரைக்கரை ஆகும்.
6. மாலத்தீவு:
தீவுகளில் சிறந்த நாடு மாலத்தீவு தான். பல சிறிய தீவுகளை கொண்டு, மிக சிறந்த கடற்கரைகளை கொண்டது. அதில் சிறந்த கடற்கரை ஹுல்ஹு மேல் கடற்கரை, ரீதி கடற்கரை, நிக்கா தீவு கடற்கரை மற்றும் பிஹிரி.