Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் என்னை பாதித்தது… குக் வித் கோமாளி அப்படி இல்லை. மனம் திறந்த பிரபல நடிகை…!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் சிறந்தது என்று ரம்யா பாண்டியன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் ‘ஆண் தேவதை’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில், ரம்யா பாண்டியன் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது என கேட்டபோது, அதற்கு அவர், ”படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், ஆனால் அந்த நிகழ்ச்சியினால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்”.

மேலும்,” குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் சிறந்தது என்றும் கூறினார். நகைச்சுவையாக இருக்கும் அந்த நிகழ்ச்சியில் தான் ரசிகர்களிடமிருந்து எனக்கு எந்த வெறுப்பும் வந்தது இல்லை” என்றும் கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி' நிகழ்ச்சி நிறைவு: ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி | ramya pandian post about cook with comali show - hindutamil.in

Categories

Tech |