எளிதாக ஆங்கிலம் பேச சென்னையில் பிரபல ஆசிரமத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது .
சென்னையில் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் ஆங்கிலம் பேச வைப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஜூன் 13க்குள் தங்களது பெயரை உன் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜூன் 16 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பானது மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்காக பலர் முன்பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர் .