இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர் விஜய், டேனியல் பாலாஜி, யோகி பாபு, பரியேரும் பெருமாள் கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.பிகில் படத்தின் ட்ரைலர் கடந்த 12_ஆம் தேதி வெளியாகி பல சாதனைகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று பிகில் படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் விரைவில் படத்தில் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது. இந்நிலையில் பிகில் படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் 27 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருந்த பிகில் திரைப்படம் 25 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ags நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனை விஜய் ரகிசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
#Thalapathy’s #Bigil will hit screens worldwide on 25th October 2019!
Indha Deepavali Nambaldhu! #Verithanam #PodraVediya #BigilDiwali @actorvijay @Atlee_dir @arrahman #Nayanthara @archanakalpathi @Screensceneoffl @SonyMusicSouth#BigilReleaseDate pic.twitter.com/luzoHxMMC7
— AGS Entertainment (@Ags_production) October 17, 2019