அமெரிக்காவில் இளம் ஆசிரியர் ஒருவருக்கு சமீபத்தில் மிகப்பெரிய தொகை லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் எல்கிரிட்ஜ் எனும் பகுதியை சேர்ந்த கேட்டி லிம்பேச்சார் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் சமீபத்தில் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு வாய்ஸ் மெயில் வந்துள்ளது. அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான $40,000 லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த கேட்டி அவருடைய கணவருக்கு போனில் இந்த விஷயத்தை கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து கேட்டி கூறுகையில், இதை நம்பலாமா ? வேண்டாமா ? என்று தெரியவில்லை. ஆனால் லாட்டரியில் கிடைத்த பரிசை கொண்டு ஐரோப்பாவுக்கு செல்ல விரும்புவதாகவும், மீதி உள்ள பணத்தை வைத்து புதிய வீடு வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.