Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தொடங்கியது பிரச்சனை… “பிகில்” ஆடியோ வெளியீட்டு விழா… அனுமதி கொடுத்தது ஏன்?… தமிழக அரசு நோட்டீஸ்.!!  

“பிகில்” ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்?  என்று கல்லூரி நிர்வாகத்திற்கு  தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி  தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக  நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணி ருக்காங்க என்று தமிழக அரசை சீண்டிய விஜய்,  யாரை எங்கே வைக்கவேண்டுமோ அவர்களை அங்கே வைத்தால் இது போல நடக்காது என்று சாடினார். விஜயின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக அமைச்சர்கள்  இந்த கருத்துக்கு கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்தனர்.

Image result for பிகில்

இந்நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்?  என்று  விளக்கம் தர தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘பிகில் விழாவுக்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது?’ இதற்கு சரியான விளக்கம் தர வேண்டும் என்று தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது . இந்த நோட்டீஸுக்கு கல்லுரி நிர்வாகம் என்ன விளக்கம் கொடுக்க  போகிறது என்று தெரியவில்லை. விஜய் தமிழக அரசை மறைமுகமாக விமர்சித்த நிலையில் கல்வித்துறை நோட்டீஸ்  அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |