சமீபத்தில் இந்த ஆண்டுக்கான பணக்காரப் பட்டியலை ப்ளூம்பெர்க் (Bloomberg) பத்திரிகை வெளியிட்டது. அதில் அமேசான் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸ்(Jeff Bezos) முதலிடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பில்கேட்ஸ் இரண்டாம் இடமும் பிடித்தனர்.
24 ஆண்டுகளாக பணக்காரப் பட்டியலில் வலம் வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பில்கேட்ஸை கடந்த ஆண்டு ஜெஃப் பெசோஸ் முதல் முறையாக பின்னுக்குத் தள்ளினார். கடந்த வெள்ளிக்கிழமை மைக்ரோசாப்ட் பங்குகள் 48 விழுக்காடு உயர்வைச் சந்தித்த நிலையில் பில்கேட்ஸ் மீண்டும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் பில்கேட்ஸ்.