உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று கத்தாரில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆதரவு கொடுத்தும் விதமாக அவருடைய ரசிகர்கள் போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த கொடியை இரவு நேரத்தில் ஒருவர் கிழித்து வீசிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாஜக கட்சியின் நிர்வாகி தீபக் என்பவர் தான் கொடியை கிழித்தது தெரியவந்துள்ளது. அதாவது தீபக் போர்ச்சுகல் நாட்டின் கொடியை பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பால் தொடங்கப்பட்ட எஸ்டிபிஐ அமைப்பின் கொடி என்று நினைத்து கிழித்துள்ளார். இந்த சம்பவம் கண்ணூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொடியை கிழித்த பாஜக நிர்வாகி தீபக்கை கால்பந்து ரசிகர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கொடியை கிழித்த நபர் தலையில் கட்டு, கையில் கட்டோடு இருக்கும் புகைப்படமும் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Only in Kerala!
A guy tears a flag of Portugal, thinking it to be that of SDPI, political arm of PFI. Portugal Football #WorldCup2022 fans in area, who put up flag, assemble and protest. Police books case on man. https://t.co/8WrUHmmynT
— Vishnu Varma (@VishKVarma) November 16, 2022