பாரதிய ஜனதா கட்சியில் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக முருகன் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னராக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப் படுவது கட்சியில் ஒரு நடைமுறையாகும். அதன் படி தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மாநில துணை தலைவர்கள் 10 பேரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த பத்து பேரும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள். இதில் புதிதாக சேர்க்கப்பட்ட வர் வி.பி துரைசாமி. திமுக வின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர். பாஜகவில் இணைந்த அவருக்கு தற்போது மாநிலத்தின் துணை தலைவராக நியமிக்கப்படுகிறார்.
யார் யாருக்கு பொறுப்பு:
சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம் முருகானந்தம், எம்என் ராஜன், மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவி தாசன்…. அதே போல கே கே டி ராகவன், வி கே செல்வகுமார் ஆகியோர் மாநில பொதுச் செயலாளராகவும்…. பாஜகவில் இணைந்த பால்கனகராஜ் வழக்கறிஞர் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்படி பாஜகவின் ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், தலைவர்கள் என அனைத்து அமைப்புகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில் பாஜகவில் அனைத்து பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.