செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய கட்சி ஒரு மாறுபட்ட கட்சி. இந்தியாவில் அனைவருக்கும் கூட பாரதிய ஜனதா கட்சி என்று கேட்கும் போது.. இந்த கட்சி ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி. நம்முடைய தொண்டர்கள் யாரும் எதையுமே கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். நிச்சயமாக தமிழக அரசு நாம் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்… பத்திரிக்கை நண்பர்கள் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்… நிச்சயமாக மாற்றான் தாய் விரோத போக்கை விட்டுவிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு.
நம்முடைய தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று மறுபடியும் அனைவருக்கும் வலியுறுத்துகிறேன். சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் எதாக இருந்தாலும், கட்சியாக ஒரு முடிவு எடுத்து இருக்கின்றோம். அவர்கள் பின்னால் இந்த கட்சி நிற்கும். அவர்கள் சொத்துக்கள் என்ன சேதம் இருந்தாலும், இந்த கட்சி பின்னால் இருந்து, நம்முடைய தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு திரும்ப அந்த சொத்து மூலமாக நஷ்டம் ஏற்பட்டு இருந்தால், அதை கொடுப்பதற்கு கட்சி முயற்சி எடுக்கும் என்று கூட தெரிவித்து இருக்கின்றேன்.
அதனால் யாரும் அச்சப்பட வேண்டாம். இதன் மூலமாக யாரும் பாஜகவின் வளர்ச்சியை தமிழகத்தில் சீர்குலைக்க முடியாது. அதே நேரத்துல மாநில அரசுக்கு மறுபடியும் வலியுறுத்துகின்றேன்….. தொண்டர்களுடைய அமைதி, எங்களுடைய பேச்சு என்பது ஒரு எல்லைக்கு தான். தொடர்ந்து இதே போன்ற இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் தொண்டர்களுடைய கோபத்துக்கும் கூட மாநில அரசு ஆளாக வேண்டி இருக்கும் என்று கூட இந்த நேரத்திலே பத்திரிகையாளர்கள் சந்திப்பு மூலமாக மாநில அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.