Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள்”… அடித்து சொல்லும் ஓபிஎஸ்.!!

பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்தார். 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில்  2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும்  தேமுதிக தலைவர் விஜயகாந்திடம்  ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால்  கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்று ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடியிடம் ஈபிஎஸ் மற்றும்  ஓபிஎஸ் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டதாக தகவல் வெளியானது.

Image result for பன்னீர்செல்வம்

இந்நிலையில் சென்னை அருகேயுள்ள திருமழிசை பகுதியில் குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில்,  துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவே இல்லை. பாஜக – அதிமுக இடையேயான கூட்டணி உறவில் எந்த பிளவும் இல்லை. பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவிடம் பேசியுள்ளோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |