அமெரிக்க அதிபரின் சகோதரியான மேரி ஆன் டிரம்ப் அதிபர் கொடூரமானவர், பொய்க்காரர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்த அதிபருக்கான தேர்தல் அமெரிக்காவில் விரைவில் நடக்க உள்ள நிலையில் ட்ரம்ப் மீது அவரது சகோதரியிடமிருந்தே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேரி ஆன் டிரம்ப் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கை குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். ட்ரம்பிற்கு கொள்கை என எதுவும் இல்லை அவர் கொடூரமானவர், பொய்க்காரரரும் கூட என்று ரகசிய பதிவில் மேரி அன் டிரம்ப் பேசியுள்ளார். அதிபர் ட்ரம்பின் மருமகள் மூலமாக இந்த பதிவு தற்போது கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் மேரி டிரம்ப் உலகில் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாகியது என்ற டிரம்பை குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை அதிபரின் வெள்ளை மாளிகை “பொய்களின் புத்தகம்” என்று கூறியிருந்தது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக அதிபர் ஒருவருக்கு பணம் கொடுத்து எழுதி கல்லூரியில் சேர்ந்தார் என்று அந்த ரகசிய பதிவில் மேரி ஆன் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப்போ அல்லது வெள்ளை மாளிகையில் இருந்தோ இந்த பதிவு தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.