Categories
தேசிய செய்திகள்

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு – பிரதமர் அலுவலகம் தகவல்!

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

பிஎம் கேர்ஸ் நிதி என்பது பிரதமர் மோடியின் நிதி சார்பில் பொதுமக்கள் தங்களால் முடிந்த தொகையை வழங்கியது. இதில் கொரோனா தடுப்பு பணிக்காக தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர், பொதுமக்கள் என தங்களால் முடிந்த தொகையை அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் நிதியில் இதுவரை எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்றும் அந்த நிதி எதெற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என கேள்வி எழுந்தது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிடவும் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அந்த தகவலை வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டது. இதுகுறித்து பல்வேறு எதிர்கட்சிகளும் கேள்வு எழுப்பிய இருந்தனர்.

இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |