Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய படகு… ஒருவர் மீட்பு… 3 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ஆம் தேதி ரெஜின் பாஸ்கர்(வயது 40), மலர் (வயது 41), கல்லூரி மாணவன் ஆனந்த்(வயது 22) ,ஜேசு (வயது 48) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் 3 நாள்களாகியும் கரைக்கு திரும்பவில்லை.. இதையடுத்து சக மீனவர்கள் கடலுக்குள் தேடிச்சென்றும் அவர்கள் காணவில்லை என்று கரை திரும்பியதால், ராமேஸ்வரம் துறைமுகப்பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில், நடுக்கடலில் திடீரென படகு மூழ்கியதால் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிகொண்டிருந்த சேசு என்ற மீனவரை மீட்டு புதுக்கோட்டை மாவட்ட கோட்டைபட்டினம் மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்துள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மற்ற 3 பேரின் நிலைகுறித்து தகவல் கிடைக்காததால் உறவினர்கள் மத்தியில் அச்சம் நீடித்து வருகிறது. தொடர்ந்து மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |