Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 22 அகதிகள் பலி…!!

நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்ததில் 22 அகதிகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகு ஒன்றின் மூலம் பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கியவர்களை தேட ஆரம்பித்தனர். ஆனால் 22 பேரை அவர்களால் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

இத்தகைய அகதிகள் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் பொருளாதார பின்னடைவு மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிர் இழக்கின்றனர். ஏற்கனவே சென்ற வியாழக்கிழமை இதேபோல் அகதிகள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து, பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து தேடுதல் வேட்டையில் லிபியா கடற்கரையோர காவல்படையினர் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

Categories

Tech |