பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியுள்ள பகுதியில் நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியிருக்கும் ஹூவான்சாகோ பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளாக தொல்லியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில் அன்றைய காலம் சிமு நாகரீகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக அனைவரும் நம்பப்படும் 227 குழந்தைகளின் உடல்கள் எலும்பு கூடுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நரபலி உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டது என தலைமை தொல்லியலாளர் கேஸ்டிலோ தெரிவித்துள்ளார். கண்டறிந்த உடல்களை ஆராய்ந்து பார்த்தபோது 4 முதல் 14 வயதுடைய குழந்தைகள் கி.பி1, 200ல் இருந்து 1, 400 ஆண்டுகளுக்குள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதில் ஒரு சில உடல்கள் தலைமுடி, தோல்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அன்றைய காலத்தில் எல் நினோ (EL NINO) எனப்படும் மோசமான வானிலையை எதிர்கொள்வதற்கு இந்த நரபலி கொடுக்கபட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இன்னும் நிறைய சடலங்கள் இருப்பது தெரிகிறது. தோண்டத் தோண்ட குழந்தைகளின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.