ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கிடந்த 27 வயதுடைய வாலிபரின் சடலத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் தலை துண்டான நிலையில் பிணமாக அப்பகுதியில் கிடந்துள்ளார். இதுபற்றி இம்மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைவாக சென்று இறந்து கிடந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அப்போது இறந்து கிடந்தவர் தாராபுரம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய் சமையல் குழுக்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விஜய் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரயிலில் மோதி இறந்துள்ளாரா அல்லது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி காவல்துறையினர் பல விதங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.