கனடாவில் ஆங்கிலம் கற்க வந்த ஜப்பானிய பெண் சூட்கேசுக்குள் நிர்வாண சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானிலிருந்து கனடாவிற்கு நட்சுமி கோகாவா என்ற இளம் பெண்ணும் வில்லியம் ஷ்னீடர் என்பவரும் ஆங்கிலம் கற்பதற்காக வந்தனர். கனடா வந்த நான்கே மாதத்தில் நட்சுமி காணாமல் போனார். ஜப்பானில் இருக்கும் தனது மனைவிக்கு போன் செய்வதாக தனது சகோதரரிடம் வில்லியம் மொபைல் வாங்கி பேசியிருக்கிறார். அப்போது அவர் தன் மனைவியிடம்,நட்சுமி மரணம் குறித்து கேள்வி பட்டாயா என்று கேட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணன், வில்லியம் நான் தான் அவளைக் கொன்றேன், நான் தான் அதை செய்தேன் என்று கூறியதை கவனித்தார். அதன்பிறகு வான்கூவரில் நட்சுமியின் சடலம் நிர்வாணமாக ஒரு சூட்கேஸ் ஒன்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் போலீசார் நட்சுமியும்,வில்லியமும் சேர்ந்து செல்லும் புகைப்படத்தை பார்த்து அவரை விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது வில்லியமின் அண்ணன், வில்லியம் தனது மனைவியுடன் பேசும்போது நான் தான் அவளைக் கொன்றேன் என்று அவர் போனில் பேசியதை போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பிறகு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வில்லியனின் அண்ணன் அளித்த சாட்சி படி அவர் வெளியில் வராத 14 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கானது மேல்முறையீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஏனென்றால் வில்லியம் உடைய அண்ணனின் கூற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தீர்ப்பளித்து இருக்கக்கூடாது என்று மீண்டும் வழக்கு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அது மட்டுமின்றி நட்சுமி யின் உடலில் வில்லியமின் டிஎன்ஏ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வில்லியம் தன் மனைவியுடன் பேசியதாக அவர் அண்ணன் கூறியது தெளிவாக சொல்லவில்லை. ஏனென்றால் அவர் நான் தான் கொலை செய்தேன் என்று கூறினாரா அல்லது நான்தான் அதை செய்தேன் என்று கூறினாரா என்று தெளிவாக கேட்காமல் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி மறுமுனையில் பேசிய அவருடைய மனைவி என்ன கேள்வி கேட்டார் என்பதும் இவருக்குத் தெரியாது. ஒருவேளை அவரது மனைவி நட்சுமி இறந்தது உங்களுக்குத் தெரிந்ததும் நீங்கள் ஏன் போலீசிடம் சொல்லவில்லை என்று கேட்டதும் அதற்க்கு வில்லியம் நான் தான் அவளைக் கொன்றேன் என்று போலீசார் நினைத்து விடுவார்கள் என பயந்து சொல்லவில்லை என்று கூறியிருக்கலாம் அல்லவா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் அவருடைய அண்ணன் அரைகுறையாக கேட்ட விஷயத்தை வழக்கில் சாட்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர்.