ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கடந்தது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் பகுதியில் அமைந்திருக்கும் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் பாதையில் சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அதன் அருகில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் 35 வயது உடைய ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இது பற்றி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பிணமாக கிடந்தவர் யார் மற்றும் எந்த ஊரைச் சேர்ந்தவர் எனவும் இவர் கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றியும் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.