Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேறு ஜாதி பெண் மீது லவ்… வீட்டை விட்டு அழைத்து சென்ற காதலன் மரத்தில் சடலமாக தொங்கிய அதிர்ச்சி..!!

வேறு ஜாதி பெண்ணை வீட்டை விட்டு அழைத்து சென்ற நிலையில், இளைஞர் மரத்தில் தூக்கில் சடலமாக  கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு வயது 23.. இவர் கொத்தனாராக வேலை செய்து வருகின்றார். இதனிடையே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த  ஒரு பெண்ணை மிகவும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் கண்டிப்பாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைத்துள்ளனர். அதே போன்று இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து இருவருமே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டனர்.. அதன்படி கடந்த திங்கட் கிழமை வீட்டை விட்டு வெளியேற, மகேந்திரன் தன்னுடைய காதலியை ராஜபாளையம் புது பஸ் நிலையம் அருகிலிருக்கும் தனது  பெரியம்மா வீட்டுக்கு அழைத்து வந்தார்.. இதனிடையே பெண்ணை காணாமல் போய் விட்டதாக அவர்களது  வீட்டில் தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தை கண்டறிந்து,  போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.. அதன்பின் காதலியும், காதலனும்  நேற்று முன்தினம் பிற்பகல் ஸ்டேஷனுக்கு சென்றனர். அப்போது, பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்குமாறு போலீசார் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அதன் பின் காதலியை அவர்களுடன் ஒப்படைத்துவிட்டு தன் பெரியம்மா வீட்டுக்கு மகேந்திரன் சோகமாக வந்துவிட்டார்.. ஆனால் நேற்று முன்தினம் மாலை முதல் மகேந்திரனை காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பதட்டமடைந்து பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்நிலையில் நேற்று  காலை சங்கரன் கோவில் செல்லும் சாலையிலுள்ள தனியார் ஆலையின் பின்புறம் இருக்கும்  கிடங்கு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மகேந்திரனின் உடல் கிடப்பதாக தகவல் வந்தது.. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் உறவினர்கள் தான் மகேந்திரனை கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாக அவரது உறவினர்கள் அளித்துள்ளதால், இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் மகேந்திரனின் உறவினர்களோ  பெண் வீட்டில் போனில் மிரட்டினர், அதன் பின் தான் மகேந்திரன் சடலமாக கிடந்தார்.. இதனால் இது கண்டிப்பாக கொலை தான் என்று கூறி வருகின்றனர்.

Categories

Tech |