இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(89). இவர் வயது மூப்பு காரணமாகவும், சிறுநீரக செயலிழப்பு காரணமாவும் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை கொடுத்தான் பலனளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மறைவிற்கு திமுக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தா.பாண்டியன் உடல் அவருடைய சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து இன்று 2 மணி அளவில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.