கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கருணீகசமுத்திரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான சீனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற 8 – ஆம் வகுப்பு பயிலும் மகன் இருந்துள்ளார். கடந்த ஜூலை 30 – ஆம் தேதியன்று சூர்யா தனது பெற்றோருடன் மதிய உணவு அருந்தி விட்டு கை கழுவுவதற்காக கிணற்றுத் பகுதிக்கு சென்றுள்ளான்.
அப்போது எதிர்பாராத விதமாக 84 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்குள் சிறுவனான சூர்யா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை அடுத்து காவல்துறையினர் சூர்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.