Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தனக்கு முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதியைச் சேர்ந்த காஜா அலாவுதீன். இவரின்  17 வயதான மகன் முபாரக் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா  ஊரடங்கு என்பதால் முபாரக் தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்  பைக்கில் சென்ற முபாரக், தனக்கு முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்து தனது பைக்கை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சிக்கியுள்ளார், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,  அவரின் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |