கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வாலிபரை ஒருவர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டப்பட அள்ளி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இதில் தந்தையும் மகனும் கடலூரில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு காரணத்தினால் வேலை இல்லாததால் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தினேஷ்குமார் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். இதில் தினேஷ் குமாருக்கு வயிற்று மற்றும் கால் பகுதிகளில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர்.
இதனைப் பார்த்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு படுகாயம் அடைந்த தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அங்கு தினேஷ் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கட்டிட மேஸ்திரியான விஜயகாந்த் என்பவருக்கும் தினேஷ் குமாரின் தயாரான சுசிலாவுக்கு கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக வீட்டை விட்டு ஓடி விட்டனர். இந்த நிலையில் சென்ற 15 நாட்களுக்கு முன்பு சுசீலா விஜயகாந்தை விட்டு வீட்டுக்குத் திரும்ப வந்து கணவன் மற்றும் மகனுடன் உடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது கள்ளக்காதலியை பார்க்க விஜயகாந்த் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதினால் நம் கள்ளத்தொடர்பை கைவிட்டு விடலாம் எனவும் இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என்வும் விஜயகாந்திடம் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்காத விஜயகாந்த் சுசீலாவை பார்ப்பதற்காக இரவு நேரத்தில் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த தினேஷ்குமார் விஜயகாந்தை இங்கு வரக்கூடாது என கண்டித்து வெளியே அனுப்பி உள்ளார். இதனால் விஜகாந்த் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள தினேஷ்குமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முடிவு செய்துள்ளார். அந்த திட்டத்தின் படி நள்ளிரவில் நேரத்தில் நாட்டு துப்பாக்கியுடன் விஜயகாந்த் தினேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரை சுட்டுவிட்டு தப்பி சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை சுட்டு விட்டு தலைமறைவாக இருக்கும் விஜயகாந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.