Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. கதறி அழுத தாய்….!!

தாயின் கண் முன்னே மகன் மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஐதராபாக்கம் கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் தனது தாய் ரஞ்சிதாவுடன் கோவிலுக்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கி சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வந்த மினி லாரி அவர் மீது மோதியுள்ளது. இந்நிலையில் தாயின் கண் முன்னே மினி லாரி சிறுவன் மீது மோதியதால் அதைப் பார்த்து அவர் கதறி அழுதுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நரேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நரேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நரேந்திரனின் உடல் உறுப்புகள் மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற மினி லாரி ஓட்டுநரான சக்தி என்பவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |