சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்பகுதியில் காவலாளி காளிமுத்தன் என்பவர் வசித்துவருகின்றார். காளிமுத்தன் மனைவி 50 வயதான செல்வி அவ்வீட்டில் இருந்த தூணிலும், அருகில் உள்ள வேப்பமரக் கிளையிலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்து கிடந்தார். அப்போது விளையாடிவிட்டு மிகவும் களைப்பாய் வந்த அவரது பேரன் யுவன்ராஜ் (6), ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டியின் மடியில் படுத்து அசந்து தூங்கியிருக்கிறான்.
இந்த நிலையில் பாரம் தாங்காத பழைமையான தூண் திடீரென எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. இதில் பலத்த படுகாயமடைந்த பாட்டி மற்றும் பேரனை மீட்டு, தேவக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது..
ஆனால், சிகிச்சைப் பலனின்றி பேரன் யுவராஜ் பரிதாபமாக இறந்து போனான். மேலும் பாட்டி செல்வி தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய சமயத்தில் நடந்த இச்சம்பவம், தேவகோட்டை பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..