அமெரிக்காவில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவனின் தாயின் சடலம் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் ஒரு சிறுவன் தன் தாயை காணாமல் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதனை அறிந்த போலீசார் சிறுவன் இருந்த இடத்திற்கு விரைந்து சென்று அவனிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுவன் நின்று கொண்டிருந்ததற்கு அருகே சில கால்தடங்கள் இருப்பதை போலீசார் கவனித்தனர்.
அதனை தொடர்ந்து சென்ற பொது காலடித்தடம் ஒரு குளத்தில் முடிவடைந்தது. அதன்பின் குளத்தில் பார்த்த போலீசாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அழுது கொண்டிருந்த சிறுவனின் தாய் குளத்தில் சடலமாக இருந்துள்ளார். மேலும் அவரது இன்னொரு மகனும் குளத்தில் சடலமாக இருந்தார்.
இவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள், ஏன் இப்படி செய்தார்கள் என்ற எந்த தகவலும் இதுவரை போலீசாருக்கு தெரியவில்லை. ஆகையால் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.