Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க போனதால்… தவறி விழுந்த சிறுவன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்றிக்காடு கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் தங்களுக்கு சொந்தமான கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான்.

அப்போது கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி ஸ்ரீகாந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைவாக வந்து ஸ்ரீகாந்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |