தொழிலாளி ஒருவர் நண்பருடன் குளிக்க சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பருடன் தொப்பையாறு அணைக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சீனிவாசன் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இது பற்றி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தகவலின் படி விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் சீனிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சீனிவாசனின் உடல் அணையின் தண்ணீரில் மிதந்ததை பார்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.