Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற சிறுவன்..! நிகழ்ந்த சோக சம்பவம்

குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற தர்ஷன் என்ற  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில் வசிக்கும் தம்பதியரான லிங்கதுரை -உமாராணி. இவர்களது 15 வயது மகன் தர்ஷன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம்  வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிவிட்டு வீடு திரும்பியதும் குளியறையில்  குளிக்க சென்றுள்ளார்.

 

நீண்ட நேரமாகியும் தர்ஷன் வெளியே வராததால் கதவை தட்டி உள்ளார்கள். அப்போது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தர்ஷன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை மருத்துவர்கள்   வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குளித்து விட்டு டவல் காயப்போட சென்ற போது ஸ்டூலில் இருந்து தடுமாறி விழுந்ததில் கொடி கயிறு கழுத்தை இறுக்கியாதல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார் என  தெரியவந்துள்ளது

Categories

Tech |