Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

மலைப்பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாறை மீது தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கதவாளம் பகுதியில் வசித்துவரும் பிரபு என்பவருக்கு நதீஷ் மற்றும் லோகேஷ் என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இந்நிலையில் இவரின் மகன்கள் 2 பேரும் தன்னுடைய நண்பர்களுடன் கதவாளம் மலைப்பகுதிக்கு விளையாடுவதற்காகச் சென்றுள்ளனர்.

அப்போது நதீஷ், லோகேஷ்  பாறை மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தனர். இதில் நிதிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் லோகேஷ் (6) காயங்களுடன் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உமராபாத் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. நண்பர்களுடன் விளையாட சென்ற போது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |