பெண் ஒருவர் தன் காதலன் ஏமாற்றிய நிலையிலும் மாற்று வழியை தேர்ந்தெடுத்து சந்தோசமாக வாழ்ந்து பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
வேல்ஸ்யை சேர்ந்த பெண் Emily Donovan(24). 100 கிலோ எடை கொண்ட இவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நேரத்தில் தன் காதலன் தனக்கு துரோகம் செய்வதை கண்டு பிடித்துள்ளார். தன்னுடைய உடல் பருமன் தான் இதற்கு காரணம் என புரிந்து கொண்ட அவர் தன்னுடைய ஏமாற்றத்தை மறந்து வேறு பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
பின்னர் தன்னுடைய உடல் எடையை குறைக்க முடிவு செய்து உடற்பயிற்சி மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். Emily எப்போதும் தன்னுடைய காதலனுடனும், நண்பர்களுடனும் வெளியே சென்று கண்டதை உண்ணும் பழக்கம் கொண்டவர். ஆனால் தற்போது தானே உணவு தயாரிக்க கற்றுக் கொண்டு வீட்டில் சமைத்து சாப்பிட ஆரம்பித்துள்ளார். முன்பெல்லாம் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க மறுக்கும் இவர் தற்போது அழகழகான புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறாராம்.
தன் காதலன் என்ன சாப்பிட்டாரோ அதையேதான் சாப்பிடுவேன், அது எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை என்று கூறும் Emily தான் உடல் எடை குறைதல் குறித்துதான் பேசுகிறாரே தவிர முன்னாள் காதலன் குறித்து எதுவும் தவறாக பேசவில்லை என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் எப்போதுமே தன்னுடைய காதலன் துரோகம் செய்து விட்டால் இதேபோன்று மாற்று வழியை தேர்ந்தெடுத்து தன்னம்பிக்கையோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.