ஆந்திர மாநிலம் சித்தூரில் வசிப்பவர் முருகன் என்பவருடைய மகள் சுஜாதா. இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக விரக்தியில் இருந்த சிலம்பரசன் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சுஜாதாவின் பெற்றோர் தன்னுடைய மகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார் என்று நினைத்த சஅவரை அழைத்துக் கொண்டு சுஜாதாவின் பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து சம்பவத்தன்று சுஜாதா எல்லோருடனும் சகஜமாக இருப்பதைப் பார்த்து அவருடைய பெற்றோர் மாறிவிட்டார் என்று நினைத்து சுஜாதாவை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது சுஜாதா தீ வைத்து கொளுத்தி உடல் கருகிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.