ராஜஸ்தானில் திருமண விருந்தில் உணவு சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மருத்துவமனையின் நிலவரப்படி இன்று காலை வரை 10 குழந்தைகள் உள்பட 70 பேரின் உடல்நலம் பாதிக்கப்பட்டடுள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், திருமண விருந்திற்கு தயார் செய்யப்பட்ட உணவில் கடுமையான வெப்பம் காரணமாக கெட்டுப்போயிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் பரிமாறப்பட்ட உணவின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.