கள்ள காதலி புது மாப்பிள்ளை மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரையப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெயகுமாரின் மனைவியான ராதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது. தற்போது சதீஷ்குமாருக்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் தனது கள்ளக் காதலியான ராதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதை நினைத்து மன உளைச்சலில் இருந்த ராதா இரவு நேரத்தில் தொலைபேசி மூலம் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
பின்னர் ராதாவின் வீட்டிற்கு சதீஷ்குமார் சென்று அங்கேயே அசதியுடன் தூங்கியுள்ளார். அதன்பின் ராதா சதீஷ்குமார் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது சதீஷ்குமார் உடல் தீயால் கருகவே அவர் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் அவரை உடனடியாக மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கீழ் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளது. அதாவது சதீஷ் குமாருக்கும், ராதாவிற்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த ராதாவின் கணவன் ஜெயக்குமார் தானாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின் ராதா மற்றும் சதீஷ்குமாருக்கு கள்ளகாதல் தீவிரமாக மலர்ந்து வந்துள்ளது. தற்போது அவருக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அவர் மேல் இருக்கும் விரக்தியால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தேன் என்று ராதா காவல்துறையினரிடம் அதிர்ச்சியுட்டும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ராதாவிற்கு 19 வயதில் மகளும், 16 வயதில் மகனும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.